தேர்தல் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நீதிமன்றுக்கு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜீவன் தொண்டமான் மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து கூறியதாவது; “நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்புமனுக்களை சமர்ப்பித்தது. மஸ்கெலியா மற்றும் கொத்மலை பிரதேச சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை அறிந்த சில குழுக்கள் இது குறித்து மகிழ்ச்சியடைகின்றன.” “ஆனால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்வோம். பின்னர் மகிழ்ச்சியாக இருந்தவர்களின் மகிழ்ச்சியும் முடிவுக்கு வரும். இந்த உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் சக்தியை முழுமையாகக் காட்ட நடவடிக்கை எடுப்போம்.”

Read More

அறிவாற்றலை பாதிக்கும் அதிகப்படியான சீனி

அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே இரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சீனியை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அதிகப்படியான சீனி உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read More

விரைவில் இந்தியா செல்கிறார் புடின்

ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்றுகொண்டு புதின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியை பதிவு செய்துள்ளது. அதற்கமைய ‘Clothing & Accessories’ (ஆடை மற்றும் அணிகலன்கள்) மற்றும் ‘Online Stores (Clothing) (ஆடைத் துறையிலான இணைய வர்த்தகம்) ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளில் இவ்வர்த்தக நாமம் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளது: இந்தச் சாதனையானதுஇ ஒப்பிட முடியாத பேஷன் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை வழங்குவதில் Fashion Bug நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. 1994ஆம் ஆண்டு ஏழு பேர் கொண்ட குழுவின் மூலம் நிறுவப்பட்ட Fashion Bug நிறுவனம்இ தற்போது வளர்ச்சியடைந்து ஒரு முன்னணி பெயராக பரிணமித்துள்ளது. இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நாடு முழுவதும் 14 காட்சியறைகளைக் கொண்டுள்ளது. உலகளாவிய ஸ்டைலான போக்குகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் அதே வேளையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுஇ உற்பத்தி செய்யப்பட்ட தொகுப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம்இ இலங்கையின் பிரீமியம் ஆடை விற்பனையாளராக திகழ்வதில் இன்று இவ்வர்த்தக நாமம் பெருமை கொள்கிறது. இந்த கௌரவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய Fashion Bug நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சபீர் சுபாய ன்இ வாடிக்கையாளர்களுடனான பயணத்தை மேம்படுத்துவதில் வலுவான கவனத்தை செலுத்துவதே இவ்வர்த்தகநாமத்தின் வெற்றிக்குக் காரணம் என குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ “Fashion Bug நிறுவனம் எனும் வகையில்இ நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் வாடிக்கையாளர் பராமரிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எமது இதயத்தில் உள்ள பிரதான விடயமாகும். சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை அளித்தல்இ ஒப்பிட முடியாத மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குதல் ஆகியன நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்இ நீண்ட கால விசுவாசத்தை பேணுவதற்கும்இ வர்த்தகநாமத்தின் பெயரை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான விடயங்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். இது ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் எதிர்பார்ப்புடன் ஆழமாக எதிரொலிக்கிறது.” என்றார். தொடர்ச்சியான மேம்படுத்தல்களை உறுதி செய்யும் பொருட்டுஇ புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள்இ விசேட பயிற்சிப் பட்டறைகள்இ தொழில்முறை சார்ந்த மேம்பாட்டு பாடநெறிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்க வகையிலான முதலீடுகளை குயளாழைn டீரப முன்னெடுத்துள்ளது. ஊழியர்களின் விசேடத்துவத்தை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதில் இவ்வர்த்தகநாமம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தமது விற்பனையாளர் குழுக்களுக்கு விற்பனைக் கொடுப்பனவுகளை வழங்கி ஊக்குவித்துஇ அதன் மூலம் அர்ப்பணிப்பையும்இ தொழில்முறை கலாசாரத்தையும் Fashion Bug வளர்க்கிறது. அது மாத்திரமன்றிஇ வாடிக்கையாளர் வெகுமதித் திட்டம் (Loyalty Rewards) மூலம் பிரத்தியேகமான தள்ளுபடிகள் மற்றும் நன்மைகளையும் வழங்குவதன் மூலம் தமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு ஷொப்பிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. 2024 LMD வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் Fashion Bug நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, இலங்கையின் விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் அதன் பங்கை எடுத்துக்காட்டுகிறது. எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, தரம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு ஆகிய நெறிமுறைகளுக்கு உண்மையாக இருந்து, எதிர்காலத்திற்கு ஏற்ற போக்குடனான பேஷனை மையப்படுத்திய தெரிவுகளை வழங்குவதில் இவ்வர்த்தக நாமம் உறுதியாக உள்ளது. ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதில் கொண்டுள்ள தனது உறுதியான நோக்குடன், இலங்கையில் சில்லறை விற்பனைத் துறையின் விசேடத்துவத்தை Fashion Bug மீள்வரையறை செய்து வருகிறது.

Read More

இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.

இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை – இந்தியா வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான பகுதியில் முன்னேற்றும் இந்த முயற்சி, கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது. இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை – இந்தியா வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான பகுதியில் முன்னேற்றும் இந்த முயற்சி, கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன கூறுகிறார். மேலும் கருத்து தெரிவித்த குமார தர்மசேன, “நாட்டில் ஒரு சட்டம் இருந்தால், நாம் அந்தச் சட்டத்திற்கு தலைவணங்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். நாட்டில் வரி செலுத்த வேண்டும் என்றால்… நாம் சட்டத்துடன் உடன்பட்டு சட்டத்தை மதிக்க வேண்டும்.” கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் கிரிக்கெட் விளையாடும்போது நல்ல சம்பளம் வாங்கினேன். இப்போது எனக்கு நடுவராக நல்ல சம்பளம் கிடைக்கிறது. “கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்தை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்களான சரித் அசலங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோருக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களை இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்களாகக் கருதி, அவர்களுக்கு வரி பிடித்தம் செய்யும் உள்நாட்டு வருவாய்த் துறையின் முடிவை செல்லாததாக்க உத்தரவு பிறப்பிக்க கோரி  பிறப்பிக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த இந்த வழக்கு இன்று (28) விசாரிக்கப்பட உள்ளது.

Read More

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் திகதி காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சார்ல்ஸ் மன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பர்மிங்காம் நகருக்கான சிறப்பு வருகையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை – பொன்சேகா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதே​போன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார்.

Read More

மாணவர் செயற்பாட்டாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட இருவரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனைய 25 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More